போராட மருத்துவர்கள் அழைப்பு!

 மருந்து தட்டுப்பாடு, வைத்தியர்களின் வெளியேற்றம் என்பன சுகாதார கட்டமைப்பை பாதிக்கும் என்ற விடயத்தை முன்னிறுத்தி எதிர்வரும் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை யாழ் மாவட்ட வைத்தியசாலைகளில் கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் வி.தர்சன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் தெற்கில் தலைதூக்கியிருந்த மருந்து தட்டுப்பாடு வடக்கையும் பாதிப்படையவைத்துள்ளது.

இதனிடையே வட மாகாணத்தில் கடந்த ஒரு வருடத்தில் மாத்திரம் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் த. சத்திய மூர்த்தி ஊடகங்களிடையே இத்தகவலை தெரிவித்துள்ளார்.


No comments