சந்நிதிக்கு காவடியுடன் சென்றவர் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு காவடிகளுடன் நடந்து சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மாவடியைச் சேர்ந்த சுந்தரம் மோகன்ராஜ் (வயது 51) எனும் நான்கு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். 

மாவடி பகுதியிலிருந்து சந்நிதி ஆலயத்திற்கு நேற்று முன்தினம் புதன்கிழமை தேர் திருவிழாவிற்கு காவடி எடுத்துச் சென்றவர்களுடன் நடந்து சென்றவர்,  ஆலயத்தில் இரவு மயங்கிச் சரிந்துள்ளார். 

ஆலய சூழலில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் மயக்கம் தெளிந்த நிலையில் அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வீட்டுக்கு கொண்டு செல்கின்ற போது இடையில் மீண்டும் மயங்கியுள்ளார்.

உடனடியாக அவரை முச்சகர வண்டியில் ஏற்றி வல்வெட்டித்துறை, ஊறணி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை கடந்த திங்கட்கிழமை செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில், அங்கப் பிரதிஷ்டை செய்த அடியவர் திடீரென சுகவீனமுற்ற நிலையில், உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

No comments