பேருந்து கட்டணம் 4.01% அதிகரிப்பு


பேருந்து கட்டணங்களை இன்றைய தினம் சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உயர்த்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதன்படி பேருந்து கட்டணம் 4.01 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

குறைந்தபட்ச கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

அத்தோடு அதிவேக பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.

No comments