பிரதமருக்கும் பங்களாதேஷ் சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பங்களாதேஷ் சபாநாயகர் ஷிரின் ஷர்மின் சவுத்ரி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது என பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் இருநாட்டு நாடாளுமன்றங்களுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் மேம்படுத்துவதற்காக நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பில், புதிய வேலைத்திட்டமொன்றை செயற்படுத்துவது குறித்து பிரதமர் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறான ஒத்துழைப்பின் மூலம் இருநாடுகளினதும் ஜனநாயக நாடாளுமன்ற செயற்பாடுகளை வலுப்படுத்த முடியும் எனவும் பங்களாதேஷ் சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment