விஜய் ஆண்டனியின் மகள் உயிர்மாய்ப்பு


நடிகர் மற்றும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்துள்ளார். 

சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் பெற்றோருடன் வசித்து வந்த விஜய் ஆண்டனியின் மகள் மீரா (வயது 16), சர்ச் பார்க் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் கல்வி கற்று வந்தார். 

கடந்த சில நாட்களாக  மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது 

அதிகாலை 3 மணியளவில் அவரது படுக்கை அறையில் உயிரை மாய்த்துள்ளார். அவரை மீட்டு  காவேரி மருத்துவமனைக்கு அவர் கொண்டு சொல்லப்பட்டாலும் சிறுமி மீரா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். சம்பவத்தின்போது நடிகர் விஜய் ஆண்டனி வீட்டில் இல்லை என கூறப்படுகிறது.

No comments