யாழில். போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றத்தில் கைதான சந்தேகநபர் உயிரிழப்பு


போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை  உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான இளைஞனை பொலிஸார் , நீதிமன்றில் முற்படுத்திய வேளை , மன்று அவரை விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டது. 

அதன் பிரகாரம் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீர் சுகவீனமுற்ற நிலையில் சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 

No comments