பிஹாரில் படகு விபத்து ; 10 மாணவர்களை காணவில்லை


பிஹாரில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற படகு இன்றைய தினம் வியாழக்கிழமை  விபத்துக்குள்ளானதில் படகில் பயணித்த 10 மாணவர்களை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள பெனியாபட் என்ற இடத்தில் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதோடு நீரில் மூழ்கிய 30 மாணவர்களில் 20 பேர் மீட்கப்பட்ட நிலையில், 10 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments