11வது நாளாகத் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் ஈருறுளிப் போராட்டம்
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருறுளி கவனயீர்ப்புப் போராட்டம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து பெல்சியம், யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது.
இன்று காலை (10.09.2023) சிற்றிகைம் நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருறுளி கவனயீர்ப்புப் போராட்டம் பிரான்சில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தை சென்றடைந்து.
இதேநேரம் அங்கே கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இன்றைய போராட்டத்தில் இளையோர், பெண்கள்.சிறுவர்கள் என வயது வேறுபாடின்றி தமிழின உணர்வாளர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்தும் நீதிக்கான எழுச்சிப் பயணம் பிரான்சு நாட்டிற்குள் தொடர்ந்தும் பயணிக்கவுள்ளது.
அனைத்துல குமுகாயத்தின் கதவுகளைத்தட்டிட, தொடர்ந்தும் அறவழிப்போராட்ட செயற்பாட்டாளர்கள் கடுமையான வெப்பக்காலநிலைக்கு மத்தியிலும் கடும்சவால்களுக்கு மத்தியிலும் உணர்வெழுச்சியுடன் ஈருருளிப்பயணத்தை தொடர்ந்த வண்ணமுள்ளனர்.
Post a Comment