போதைப்பொருளை யாழில் விற்பனை செய்ய வந்த கொழும்பு வாசி கைது!


கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஹெரோயின் போதைப்பொருள் விற்பனைக்கு கொண்டு வந்த கொழும்பு வாசி ஒருவர் இன்றைய தினம் வியாழக்கிழமை  கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு தொட்டலங்க பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டவராவார்.

குறித்த நபர் யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனை செய்வதற்காக வந்துள்ளதாக பொலிஸ் சிறப்பு அதிரடி படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பேருந்து நிலையத்திற்கு விரைந்த அதிரடி படையினர் சந்தேக நபரை கைது செய்ததுடன் , அவரிடம் இருந்து 33கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் மீட்டுள்ளனர். 

மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மீட்கப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேக நபர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளார். 

No comments