வடமராட்சியில் விபத்து - சிறுவன் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சையிக்கிளும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதோடு இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 கரணவாய் வடமேற்கு, கொற்றாவத்தை கணபதி மில்லுக்கு அருகாமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 விபத்தில் கொற்றாவத்தை பகுதியைச் சேர்ந்த சாகித்தியன் (வயது 14) எனும் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

 அப்பகுதியை சேர்ந்த அஜந்தன் (வயது 21) என்பவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 மோட்டார் சையிக்கிளும் டிப்பர் வாகனமும் வளைவு பகுதியில் திரும்பிய போது இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதியது. 

இதில் மோட்டார் சையிக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டதோடு, மோட்டார் சையிக்கிளும் டிப்பர் வாகனத்தினுள் சிக்குண்டு தீ பிடித்தும் எரிந்துள்ளது. 

 சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments