கஞ்சாவை வைத்திருக்க ஜெர்மன் அமைச்சரவை ஒப்புதல்


யேர்மனியில் பெரியவர்கள் 25 கிராம் (0.9 அவுன்ஸ்) வரை கஞ்சாவை வைத்திருக்கவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மூன்று செடிகள் வரை வளர்க்கவும் யேர்மனியில் புதிய சட்டத்திற்கான வரைபுக்கு  யேர்மனி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

அத்துடன் 500 உறுப்பினர்களைக் கொண்ட இலாப நோக்கற்ற "கஞ்சா கிளப்பில்" சேரவும் மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். அங்கே போதைப்பொருளை சட்டப்பூர்வமாக பயிரிடலாம் மற்றும் வாங்கலாம்.

எதிர்வரும் செப்டம்பர் 4 அன்று கோடை விடுமுறையிலிருந்து திரும்பிய யேர்மன் பாராளுமன்றத்தில் உள்ள சட்டமியற்றுபவர்களால் இந்த வரைபு அங்கீகரிக்கப்பட வேண்டும். அங்கீகரிக்கப்பட்டதும் அது மக்கள் பயன்பாட்டு கொண்டுவரப்படும்.

கஞ்சா மீதான யேர்மனியின் அணுகுமுறையில் வரைவு சட்டத்தை "ஒரு திருப்புமுனை" என்று சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக் அழைத்தார்.

மிகவும் தளர்வான அணுகுமுறை கறுப்புச் சந்தை மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களை முறியடிக்கும், சட்ட அமலாக்கத்தின் சுமையை எளிதாக்கும் மற்றும் மரிஜுவானாவை (கஞ்சா) பாதுகாப்பான நுகர்வுக்கு அனுமதிக்கும் என்று அவர் பெர்லின் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

சிறார்களுக்கு  போதைப்பொருள் பயன்படுத்த தடை விதிக்கப்படும். மேலும் குறிப்பாக இளைஞர்களுக்கு ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து அரசாங்கம் ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார்.

முன்மொழியப்பட்ட சட்டம் வரைவு அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் மைய இடசாரித் தலைமைக் கூட்டணியின் முதன்மைத் திட்டமாகும். மேலும் ஜெர்மனியை ஐரோப்பாவில் மிகவும் தாராளவாத கஞ்சா கொள்கைகளில் ஒன்றாக மாற்றிவிடும்.

உரிமம் பெற்ற கடைகளில் கஞ்சா பரவலான விற்பனையை அனுமதிக்கும் திட்டங்கள் ஐரோப்பிய ஆணையம் கவலைகளை எழுப்பிய பின்னர் ஏப்ரல் மாதத்தில் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது,

No comments