உக்ரைனின் கடல் டிரோன் தாக்குதலில் சேதமடைந்து ரஷ்ய டேங்கர்


கிரிமியா அருகே கடல் உக்ரைனின் ட்ரோன் தாக்குதலில் ரஷ்ய கொள்கலன் கப்பல் (டேங்கர்) சேதமடைந்ததுள்ளது என ரஷ்யாவின் டாஸ் (TASS) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நடந்த தாக்குதலில் கப்பலில் 11 பேர் பயணித்ததாகவும், கப்பலிலிருந்து எரிபொருள் வெளியேறவில்லை. கப்பலின் இயந்திர அறையின் உள்ள வாட்டர்லைனில் ஒரு துளை ஏற்பட்டது என்றும் டாஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 

சனிக்கிழமை அதிகாலை மூன்று மணி நேரத்திற்குப் பிறகு பாலத்தின் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது.

நேற்று முன்தினம் தெற்கு ரஷ்யாவில் உள்ள நோவோரோசிஸ்க் கடற்படை தளத்தில் ரஷ்ய கடற்படைக் கப்பல் மீது கடல்வழி ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் கூறிய மறு நாள் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத்தாக்குதல்கள் உன்ரைனால் நடத்த வாய்ப்பில்லை என்றும் அனைத்து தொழில்நுட்பங்களும் மேற்கு நாடுகளால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதாக ரஷ்யா தரப்பு குற்றம் சாட்டுகிறது. குறிப்பாக பிரித்தானியா இத்தாக்குதல்களுக்கு பின்புலத்தில் செயற்படுவதாக ரஷ்யா சந்தேகம் வெளியிட்டுள்ளது.


No comments