இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை


அரசாங்க சொத்துகளை விற்றதாக குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை 5 ஆண்டுகள் அரசியலில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் 1 இலட்சம் பாகிஸ்தான் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.. 

 இந்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

நீதிமன்றத்தினால் தண்டனை அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, பஞ்சாப் பொலிஸாரினால் இவர் கைது செய்யப்பட்டுள்ளாதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

No comments