பீதியில் இராணுவ ஜெனரல்களுக்கு ஓய்வு கொடுக்கும் ருவாண்டா மற்றும் கேமரூன்


அண்மைக்காலமாக மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஏற்படும் இராணுவ ஆட்சி தொடர்ந்து பீதியின் காரணமாக ருவாண்டா மற்றும் கேமரூன் நாடுகள் தங்களின் பாதுகாப்புப் படைகளின் மூத்த தளபதிகளுக்கு தீடீரென ஓய்வு கொடுத்து இனையவர்களான புதிய தளபதிகளை நியமித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள இராணுவப் பிரிவுகளை வழிநடத்த புதிய ஜெனரல்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ருவாண்டாவில் ஜனாதிபதி பால் ககாமே நூற்றுக்கணக்கான வீரர்களுக்கு ஓய்வு அளித்தார். அவர்களின் இடங்களுக்கு புதிய படைத் தளபதிகளை நியமித்தார். இந்த மாற்றம் இளைய வீரர்களின் முன்னேற்றத்திக்கு உதவுகிறது என்று கூறினாலும் அடிப்படையில் அரசாங்கத்தை கவிழ்த்து இராணுவ ஆட்சி வந்து விடும் என்ற அச்சமே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ருவாண்டா பாதுகாப்புப் படை (RDF) பன்னிரண்டு ஜெனரல்கள், 83 மூத்த அதிகாரிகள் மற்றும் ஆறு இளைய அதிகாரிகளின் ஓய்வுக்கு ஜனாதிபதி ககாமேயின் ஒப்புதலை வெளிப்படுத்தும் அறிக்கையை வெளியிட்டார்.

அத்துடன் கூடுதலாக 86 மூத்த அதிகாரிகள் ஓய்வு பெறுவார்கள். ஒப்பந்தங்கள் முடிவடைந்தவுடன் சுமார் 678 வீரர்கள் ஓய்வு பெற்றனர். மேலும் 160 அதிகாரிகள் மருத்துவ ரீதியாக வெளியேற்றப்பட்டனர்.

ருவாண்டாவின் 1994 விடுதலைப் போரின் முக்கிய பங்காற்றிய நபர்களான ஜெனரல் ஜேம்ஸ் கபரேபே, ஜெனரல் ஃப்ரெட் இபிங்கிரா மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் சார்லஸ் கயோங்கா உட்பட பலர் ஓய்வு பெற்றவர்களில் அடங்குவர். 

கபரேபே மற்றும் கயோங்கா இருவரும் முன்பு ருவாண்டா இராணுவத்தின் பாதுகாப்புப் பணியாளர்களின் தலைமைப் பதவியை வகித்தனர்.

சமநேரத்தரில் ருவாண்டா ஜனாதிபதி பல இளம் அதிகாரிகளை கேர்ணல் பதவிக்கு உயர்த்தினார் மற்றும் இராணுவப் பிரிவுகளை வழிநடத்த புதிய ஜெனரல்களை நியமித்தார். 

ஓற்ற ஓய்வு பெற்றவர்கள் லெப்டினன்ட் ஜெனரல் ஃபிராங்க் முஷ்யோ கமான்சி, தற்போது ரஷ்யாவிற்கான ருவாண்டாவின் தூதுவர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் ஆல்பர்ட் முராசிரா ஆகியோரை ஓய்வுப் பட்டியலுக்குள் அடக்கியுள்ளது.

புதிய பாதுகாப்பு அமைச்சராக ஜுவனல் மரிசமுண்டாவை நியமித்தார்.

இதேபோன்று ஆபிரிக்காவின் நீண்ட காலம் ஆட்சி அதிகாரத்தில் உள்ள தலைவர்களில் ஒருவரான கேமரூனின் ஜனாதிபதி பால் பியா,  பாதுகாப்பு அமைச்சகத்தின் மத்திய நிர்வாகப் பிரிவில் புதிய நியமனங்களைச் செய்தார்.

No comments