பொன்னாவெளி:யப்பான் சீமெந்து கம்பெனிக்கு!
கிளிநொச்சி - பூநகரி, பொன்னாவெளியில் அமைக்கப்படவுள்ள சீமெந்து தொழிற்சாலைக்கு எதிராக பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.
வலைப்பாடு, கிராஞ்சி, வேரவில் கிராம மக்களும், அப்பிரதேச மக்கள் அமைப்புக்களும் ஒன்று சேர்ந்து இன்று ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.
பொன்னாவெளி கிராமத்தில் சீமெந்து தொழிற்சாலைக்காக பல ஏக்கர் காணியை சுவீகரித்து, பல மீற்றர்கள் ஆழத்தில் சீமெந்து தொழிற்சாலைகிகான கல் அகழ்வு பணிகள் மேற்கொள்வதற்கான ஆரம்ப கட்ட பணிகள் இடம்பெற்று வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
விவசாய நிலங்களை அழிக்காதே, ஏழை மக்களின் வளங்களை சுரண்டி பிழைக்காதே, சுண்ணக்கல் அகழ்வு வேண்டாம், டோக்கியோ சீமெந்து கம்பனியே வெளியேறு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும், கோசங்களையும் எழுப்பியவாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனிடையே அரச ஆதரவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொன்னவெளியிலிருந்து முருகைக்கற்களை அகழ்வதில் முனைப்பு காண்பித்துவருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment