குருந்தூர்மலை எமக்கில்லையாம்!

 


குருந்தூர்மலை, குருந்தி ராஜமஹா விகாரை ஆகியன சிங்கள பௌத்த மக்களின் தொல்லியல் அடையாளம் என்பதை வலியுறுத்தி "කුරුන්දි විහාරවංසය" எனும் நூல் நேற்று வெளியிடப்பட்டு இருக்கின்றது 

மாகாவம்சம், தொல்லியல் திணைக்கள ஆய்வுகள் , The Manual of Vanni District  (கையேடு) உள்ளிட்ட பல்வேறு மூலங்களை ஆதாரமாக கொண்டு  குருந்தூர்மலை சிங்கள பௌத்த மக்களின் தொல்லியல் அடையாளமாக இந்த புத்தகத்தில்  நிறுவி இருக்கின்றார்கள் 

இலங்கை பல்கலைக்கழக மருத்துவ பீடமொன்றில் மிக இளைய வயதில் பேராசிரியர் என்கிற உயரிய தகுதி நிலையை  அடைந்த Dr சன்ன ஜெயசுமன தலைமையில் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் Chandima B. Ambanwala மற்றும் Sumeda Weerawardena ஆகியோர் இந்த  நூலை எழுதி இருக்கின்றார்கள் 

பேராசிரியர் Dr சன்ன ஜெயசுமன அவர்கள் ரணில் அரசாங்கத்தின் பாராளமன்ற உறுப்பினராகவும் தற்போது கடமையாற்றி வருகின்றார் 

மேற்படி புத்தககத்தின் முதற் பிரதியை தமிழ் மக்களின் வாக்குகளால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இருந்த  மைத்திரிபால சிறிசேன பெற்று கொண்டு இருக்கின்றார் 

இந்த நிகழ்வில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பாராளமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் போட்டியிட்ட   டலஸ் அழகப்பெருமா, பேராசிரியர் ஜீ எல் பிரீஸ் உட்பட ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு இருந்தார்கள் 

அதே போன்று பேராசிரியர் பிரனீத் அபேசுந்தர அவர்கள் குருந்தி விகாரை குறித்து  எழுதி பாடிய කුරුන්දි ගීතය என்கிற ஒலி பேழையும் இங்கு வெளியிடப்பட்டு இருக்கின்றது 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு இருந்த விசேட வைத்திய நிபுணர் கலாநிதி அனுலா விஜேசுந்தர, கலாநிதி நளின் டீ சில்வா உட்பட மூத்த வைத்தியர்கள், பேராசிரியர்கள், சட்டத்தரணிகள் குருந்தூர் மலையை மீட்க சபதம் ஏற்று இருக்கின்றார்கள் 


No comments