பறளாயில் முன்னணியும் களமிறங்கியது!


 

சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திலுள்ள அரச மரத்தை பௌத்த சின்னமாக அடையாளப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தகமானி அறிவிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சங்கானை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னாள் மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

முன்னதாக காலை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பொது மைப்புக்கள் உடன் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தது.

No comments