13நாடகம்:நாங்கள் தயார்!ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி தமிழ் தேசியக்கட்சிகள்(?) இந்தியாவின் 13ம் திருத்தத்திற்குரிய நாடகத்தின் அடுத்த கட்டமாக ரணிலுக்கு அனுப்பிய கடிதம் வெளிவந்துள்ளது. 

ஆகஸ்ட் 7, 2023

 மாண்புமிகு ரணில் விக்கிரமசிங்க

 இலங்கை ஜனாதிபதி

 ஜனாதிபதி செயலகம், கொழும்பு 01

 ஐயா

 13A ஐ செயல்படுத்துவது குறித்த கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பித்தல் சம்பந்தமாக

 நாங்கள் ஐந்து அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டணியாக மேற்கூறியவை தொடர்பாக உங்கள் Ref PS/PCA/03-iii 2023 ஆகஸ்ட் 2 தேதியிட்ட கடிதத்தை மேற்கோள் காட்டி, எங்கள் கருத்துக்களைப் பின்வருமாறு முன்வைக்க விரும்புகிறோம்.

 1. ஏற்கனவே 1988 இல் பாராளுமன்றத்தில் 5/6 பெரும்பான்மையுடன் 13A அரசியலமைப்பில் இணைக்கப்பட்டது.

 2. அன்றிலிருந்து நாடு முழுவதிலும் மாகாண சபைகள் நிறுவப்பட்டு, தேர்தல்கள் நடத்தப்பட்டு, தேர்தலை நடத்துவதற்காகக்  கலைக்கப் படும் வரை செயல்பட்டன.

 3. எனவே ஏற்கனவே இருக்கின்றதானதும் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதையும் நடைமுறைப்படுத்துவதற்கு கருத்துக்களை கோர வேண்டிய அவசியமில்லை.

 எவ்வாறாயினும், 13A இன் கீழ் வழங்கப்பட்ட சில மாகாண சபை அதிகாரங்கள் திட்டமிட்ட வகையில் காலத்திற்கு காலம் அவ்வப்போது  திரும்பப் பெறப்பட்டன.

 மாகாண சபைகளில் இருந்து மீளப் பெறப்பட்ட அவ் அதிகாரங்களை மீண்டும் வழங்கி, காணி, பொலிஸ், நிதி மற்றும் நிர்வாக அதிகாரங்களுடன் 13A ஐ அதன் அசல் வடிவில் நடைமுறைப் படுத்த நாங்கள் முன்மொழிகிறோம்.

 அ. அடைக்கலநாதன் பா.உ                         த. சித்தார்த்தன் பா.உ

 கூட்டணிக்காகவும் அதன் சார்பாகவும் (தமிழ் ஈழ விடுதலை இயக்கம் - TELO, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி - DPLF, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - EPRLF, தமிழ்த் தேசியக் கட்சி - TNP மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி - DCP)No comments