தென்னாபிரிக்காவில் தீ விபத்து: 73 பேர் பலி!! 52 பேர் காயம்!!

தென்னாபிரிக்கா நாட்டின் வர்த்தக நகரான ஜோகன்னஸ்பேர்க்கில் உள்ள அடுக்குமாடிக்கட்டிடத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ

விபத்தில் 73 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 52 பேர் காயமடைந்துள்ளதனர்.

அவசரகால மேலாண்மை சேவை செய்தித் தொடர்பாளர் ராபர்ட் முலாட்ஸி சமூக ஊடகமான எக்ஸ் (ருவிட்டர்) பதிவில் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

73 போின் உயிரிழந்த உடல்கள் மீட்கப்பட்டதாகவும் 52 பேர் காயமடைந்ததாகவும் பதிவிட்டார். 

சில உடல்கள் அடையாளம் காணப்படமுடியாத அளவுக்கு எரிந்து காணப்படுவதாகவும் தொலைக்காட்சி செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

ஐந்து மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடத்தில் பரவிய தீயை தீயணைப்பு வீரர்கள் விடிய விடியப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தற்போதும் கட்டிடத்தினுள் தேடும் பணிகள் தொடர்கின்றன.

தீ எதனால் ஏற்பட்டது என்பது உடனடியாகத் தெரியவில்லை. இக்கட்டித்தில் 200 பேர் வரை வாழ்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இக்கட்டிடம் தற்போது குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தங்கியிருந்ததாவும் குறிப்பாக புலம்பெயர்ந்தவர்களின் தங்கியிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


No comments