வன்னி நகையா?
இலங்கையில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட சுமார் 33கோடி பெறுமதியுடைய 15 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே களிமண்குண்டு கடற்கரை பகுதியில் புதன்கிழமை (30) ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
அதன் போது இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டு இருசக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 15 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இரு சக்கர வாகனத்தில் தங்கம் கொண்டு வந்த ஒருவர் அவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வன்னியில் இறுதி யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட தங்க நகைகளை தேடிகண்டறிவதில் பல குழுக்கள் படையினர் சகிதம் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில் பெருமளவு தங்கள் வன்னி ஊடாக கடத்தப்பட்டமை சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
Post a Comment