பாரிய வன்னி தீ கட்டுப்பாட்டினுள்!
கிளிநொச்சி மாவட்டத்தின் முக்கொம்பன் காட்டுப்பகுதியில் மூண்ட பாரிய காட்டுத்தீ பலத்த பிரயத்தனத்தின் மத்தியில் இன்;றிரவு கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது.அதன் மூலம் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடியிருப்புக்கள் காப்பாற்றப்பட்டுள்ளது.

கடந்த மூன்று தினங்களாக காட்டில் தீபரவல் ஏற்பட்டிருந்த போதும் எத்தகைய தரப்பும் கொண்டிருக்கவில்லை.இந்நிலையில் நேற்றிரவு பூநகரி பிரதேசசபை தலைமையலுவலகத்திற்கு பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து கரைச்சி பிரதேசசபையின் தீயணைப்பு பிரிவின் உதவியுடன் பலத்த போராட்டத்தின் மத்தியில் தீப்பரவல் இன்றிரவு கட்டுப்பாட்டினுள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போதைய உலர்ச்சியான காலநிலை மற்றும் காற்று காரணமான தீப்பரவல் கட்டுப்படுத்த முடியாத நிலையினை எட்டியிருந்தது.

வுனவளத்திணைக்களமோ வழமையாக அனர்த்த நேரத்தில் கைகொடுக்கும் பாதுகாப்பு தரப்போ உதவாத நிலையில் பூநகரி பிரதேசசபை கரைச்சி பிரதேசசபை தீயணைப்பு பிரிவுடன் இணைந்து தீயினை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளமை மக்களிடையே பாராட்டுக்களை பெற்றுத்தந்துள்ளது.

இதனிடையே பூநகரி பிரதேசசெயலர் தனது உத்தியோகத்தர்கள் சகிதமும் கிளிநொச்சி மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளரது ஆலோசனையின் பேரில் வருகை தந்தும் தீயணைப்பு பணிகளை ஒருங்கிணைத்திருந்தனர்.

முற்றாக காடும் காடு சார்ந்த கிராமமுமான முக்கொம்பன் 65வீட்டுக்குடியிருப்பு திட்டம் மற்றும் அதனோடிணைந்த கிராமங்கள் தீப்பரவல் காரணமாக முற்றாக புகை சூழ்ந்திருந்த போதும் மாலையின் பின்னர் இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது.

இதனிடையே எஞ்சிய காடுகளில் தீப்பரவல் ஏற்படாது இன்றிரவு முதல் வனவளத்திணைக்களம் களமிறங்கியுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. No comments