கல்வியங்காடு மரணத்தில் சந்தேகம்!யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்த 52 வயதான குடும்பஸ்தர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்று (12) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை உயிரிழந்தவரின் உறவினர் ஒருவர் குறித்த வீட்டிற்கு சென்று பார்த்த போது குடும்பஸ்தர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவி நேற்றைய தினம் (11) திருமணச் சடங்கிற்கு சென்றிருந்த நிலையில் குடும்பஸ்தர் தனியாக வீட்டில் இருந்த வேளை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

இதேவேளை, உயிரிழந்தவரின் சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுவதால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

No comments