வடகிழக்கில் தமிழ் பௌத்தமே இருந்தது!



தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில், பௌத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை எனவும், மாறாக பாதுகாப்பே இருந்தது.அதற்கு காரணம், காவி உடைக்கு தந்த மரியாதை எனவும், வடக்கு கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெள விமலசாரநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

வவுனியா விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், குறுந்தூர் மலை விடயமானது, தொல்பொருள் திணைக்களத்திற்கு உரியது.

இதனை தனி ஒரு மதம் மட்டும், தனக்கானது என உரிமை கொண்டாட கூடாது.

சிங்கள பௌத்தர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பது முரணானது. ஆனால், இங்கு தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதுவே உண்மை.

தெற்கில், சம்பந்தமே இல்லாமல், சிங்கள பௌத்த கிராமத்திற்குள், கிறிஸ்தவ மத குருவோ அல்லது சைவ பூசகரோ சென்று, தங்கள் தளம் எனக்கூறி உரிமை கொண்டாடினால், சிங்கள பௌத்தர்கள் ஏற்றுக்கொள்வார்களா அல்லது விட்டுத்தான் கொடுப்பார்களா?.


அவ்வாறிருக்கும் போது, தமிழரின் பூர்வீக இடமான குருந்தூர்மலை பகுதியில், பௌத்த துறவி ஒருவர் தினமும் சென்று உரிமை கொண்டாடினால், தமிழர்கள் மட்டும் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று நினைப்பது, எவ்வாறு சாத்தியப்படும்.

வணக்க ஸ்தலங்கள், எல்லா மதத்தவருக்கும் எல்லா இனத்தவருக்கும் உரியது. சிங்கள பௌத்த என்றில்லாமல், நாங்கள் இலங்கையர்கள்.யாரும் வணங்கலாம் என்ற பொதுநிலைக்கு, நாங்கள் சிந்திக்க வேண்டும். ஒரு சிலர், இந்த விடயத்தை அரசியலாக்கி, இனங்களுக்கு இடையிலான முறுகலை ஏற்படுத்துவதற்கு முயல்கின்றனர்.

தொல்பொருள் இடத்தின் முழுப்பொறுப்பையும், தொல்பொருள் திணைக்களம் மட்டுமே எடுக்க வேண்டும். அதில் வேறு எந்த மதத்தவரும் தலையிடக் கூடாது. என வலியுறுத்தப்பட்டது. ஊடக சந்திப்பில், மும்மத தலைவர்களும் பங்கேற்றிருந்தனர். 


No comments