காலி சிறைச்சாலையில் அடையாளம் காணப்படாத தொற்று நோய் ; இரு கைதிகள் உயிரிழப்பு


அடையாளம்  காணப்படாத நோய் நிலைமை காரணமாக காலி சிறைச்சாலையில்  கைதிகள் இருவர்  உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, மேலும் 05 கைதிகள் நோய்வாய்ப்பட்ட நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இந்த தொற்று நிலை கண்டறியப்படவில்லை எனவும், மருத்துவர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பதற்காக சிறைச்சாலையில் முகக்கவசம் பயன்படுத்தப்படுவதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments