மீண்டும் பஸிலுக்கு முடிசூட்டு விழா?ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளராக பசில் ராஜபக்ச களமிறக்கப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

‘பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்தற்காகவே ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு கட்சி என்ற ரீதியில் நாடாளுமன்றத்தின் ஊடாகவும் ஒத்துழைப்பு வழங்குகிறோம். 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ‘லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே வேட்பாளராக களமிறக்குவோம். முன்னாள் நிதியமைச்சர் பசில் ராசபக்ச ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படலாம்’ என காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

No comments