கோண்டாவிலில் இரண்டு வாள்களுடன் இளைஞன் கைது


யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இரண்டு வாள்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் 

பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது , இரண்டு வாள்கள் மீட்கப்பட்டன. 

அதனை அடுத்து வீட்டில் வசிக்கும் இளைஞனை கைது செய்து , வாளுடன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்திய நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments