நெல்லியடியில் விபத்து - இரு இளைஞர்கள் உயிரிழப்பு!


யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

கரவெட்டி வதிரியைச் சேர்ந்த விஜயகாந்த் நிசாந்தன் (வயது -29) மற்றும் செல்வநாயகம் வின்சன் மனோஜ்குமார் (வயது-31) ஆகிய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

 நெல்லியடி கலிகை சந்தி பகுதியில் உள்ள வீதி வளைவொன்றில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

விபத்து குறித்து நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments