பொதுமகனிடம் பணம் பறித்த குற்றத்தில் மட்டக்களப்பில் பொலிஸார் மூவர் கைது


மட்டக்களப்பில் உணவகம் ஒன்றில் வேலை முடித்து விட்டு ஏறாவூரிலுள்ள தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தவரிடம் 6ஆயிரத்து 500 ரூபாய் பணத்தினை பிரித்தெடுத்த மூன்று பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மட்டக்களப்பில் உள்ள உணவகத்தில் வேலையை முடித்துக்கொண்டு   நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் ஏறாவூரில் உள்ள தனது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்த நபரை பொலிஸ் ஜீப் வண்டியில் வீதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜெண்ட் உள்ளிட்ட மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வழி மறித்து சோதனையிட்டுள்ளனர். 

அதன் போது குறித்த நபரிடம் அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதி பத்திரம் இல்லை என்பதால் அவரை கைது செய்து ஜீப் வாகனத்தில் ஏற்றி வீதியில் சுற்றி திரிந்து 25 ஆயிரம் ரூபாய் பணம் தந்தால் விடுவிப்பதாக கூறியுள்ளனர். 

அதன் போது அவர் தன்னிடம் 6500 ரூபாயே உள்ளது என கூறியதும் , அந்த பணத்தை பறித்தெடுத்த பின்னர் அவரை வீதியில் அநாதவராவாக விட்டு சென்றுள்ளனர்.  

இது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர்களிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில் , அவர்கள் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.    

No comments