குருந்தூர் மலை விவகாரம் ; அமெரிக்கா உன்னிப்பாக அவதானிக்கிறதாம்


குருந்தூர் மலை விவகாரத்தை அமெரிக்க உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருப்பதாக , இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் புதன்கிழமை விஜயம் மேற்கொண்ட தூதுவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினார். 

அதன் ஒரு பகுதியாக தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் , யாழ்ப்பாணத்தில் இயங்கும் பத்திரிகை நிறுவனங்களின் ஆசிரியர்கள் , அழைக்கப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். 

அதன் போது, குருந்தூர் மலை தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் , 

குருந்தூர் மலை விவகாரத்தில் , சட்ட பிரச்சனை , காணிப்பிரச்சனை , அரசியல் பிரச்சனை என மூன்று விடயங்கள் உள்ளடங்கி உள்ளன. 

அதனால் இதொரு சிக்கலான விடயம். இதனை கவனமாக கையாள வேண்டும். இதனை இலங்கை அரசாங்கம் எவ்வாறு கையாளுகிறது என்பதனை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டு இருக்கிறோம். 

இந்த சிக்கலுக்கு இலங்கை அரசாங்கம் மிக விரைவில் அமைதியான தீர்வை காண வேண்டும். இல்லாவிடின் இதொரு பாரிய பிரச்சனையாக உருவெடுக்கும். 

இந்த பிரச்சனையை விரைந்து தீர்ப்பதற்கு , அமெரிக்க அழுத்தங்களை வழங்கும் என தெரிவித்தார். 

No comments