யாழில். வறட்சியால் 22 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு ; குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த கோரிக்கை


யாழில் நிலவும் வறட்சியான கால நிலைமையை கருத்தில் கொண்டு நீரினை சிக்கனமாக பயன்படுத்துமாறு யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் கோரியுள்ளார். 

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

யாழ். மாவட்டத்தில் வறட்சியால் 22 ஆயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 08 ஆயிரம் குடும்பங்கள் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர். 

நெடுந்தீவு , ஊர்காவற்துறை , சாவகச்சேரி , மருதங்கேணி மற்றும் சங்கானை ஆகிய பிரதேச செயலர் பிரிவுகள் அதிக பாதிப்பை எதிர் கொண்டுள்ளன. 

குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு குடிநீர் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் உள்ளிட்டவர்களின் தரவுகளை பிரதேச செயலகங்கள் ஊடாக சேகரிக்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகிறது. 

யாழ்.மாவட்டத்தில் தற்போது கிணறுகளின் நீர் மட்டம் குறைந்துள்ளதால் மக்கள் நீரினை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தெரிவித்தார். 

No comments