குறிகட்டுவான் இறங்குதுறைக்கு கனரக வாகனம் செல்ல தடை


யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்கு துறை பகுதிக்கு கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் இருந்து , நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளில் செல்வோர் குறிகட்டுவான் இறங்கு துறைக்கு சென்றே அங்கிருந்து படகில் தீவுகளுக்கு பயணிப்பார்கள். 

பயணிகள் மாத்திரமின்றி பொருட்களும் இந்த இறங்கு துறை ஊடாகவே தீவுகளுக்கு கொண்டு செல்லப்படும். 

இந்நிலையில் இறங்கு துறையின் கீழ் பகுதியில் இருக்கும் இரும்புகள் துருப்பிடித்து வலுவிழந்து காணப்படுவதனால்  ,கனரக வாகனங்கள் செல்வதற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக , வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் குரூஸ் தெரிவித்துள்ளார். 

இறங்கு துறை பகுதிக்கு மனித வலுவை பயன்படுத்தி பொருட்களை கொண்டு சென்று படகுகளில் ஏற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம். 

அடுத்த வாரம் கப்பல் கட்டுமானம் தொடர்பான விசேட குழு யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது. அந்த குழுவுடன் இணைந்து இறங்கு துறை தொடர்பில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். அது வரையில் இறங்கு துறை பகுதிக்கு கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்துள்ளோம் என்றார். 

No comments