யாழில். மனைவியை வாள் முனையில் கடத்தி சென்றுள்ளார் என கணவனுக்கு எதிராக முறைப்பாடு


தனது மனைவியை வாள் முனையில் கடத்தி சென்ற கணவனுக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் , குடத்தனை பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக மனைவி கணவனை விட்டு , பிரிந்து குடத்தனையில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கி இருந்துள்ளார். 

இந்நிலையில் மனைவி தங்கி இருந்த குடத்தனை வீட்டுக்கு வாளுடன் சென்ற கணவன் மனைவியை வாள் முனையில் கடத்தி சென்றுள்ளார். 

இது தொடர்பில் கடத்தப்பட்ட பெண்ணின் தாயார் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

No comments