13:காய்ச்சல் தொடங்கியது!



அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படக் கூடாதென மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். 

அத்தகைய சட்டத்தின் நடைமுறை இலங்கையை பிளவுபடுத்தும் நடவடிக்கை எனவும் இதனடிப்படையில் அச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

அதேவேளை, இலங்கையை இரண்டாக பிரிக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் எந்தக் காரணத்துக்காகவும் நடைமுறைப்படுத்தப்படக் கூடாதென இதுராகாரே தம்மரத்தன தேரர் தெரிவித்துள்ளார். 

13வது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த  முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் தமது எதிர்ப்புக்களை வெளியிட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.

இதனிடையே 13வது திருத்த சட்டத்தினை ஜனாதிபதியும் இந்தியாவும் இணைந்து முழுமையாக அமுல்படுத்த செயற்படும் நிலையில் தென்னிலங்கையில் உள்ள சில அரசியல் கட்சிகளும் வடகிழக்கில் உள்ள சில அரசியல் கட்சிகளும் இனமுரண்பாட்டைத் தோற்றுவிக்க முயற்சிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் பிரதித் தலைவர் இரா.துரைரத்தினம் குற்றஞ்சாட்டியுள்ளார்.


No comments