வசவிளானில் 20 பவுண் நகைகள் திருட்டு


யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் வீடொன்றினுள் நுழைந்த திருடர்கள் 20 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர். 

வசாவிளான் பகுதியில் உள்ள வீடொன்றின் உரிமையாளர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை வங்கி ஒன்றுக்கு சென்ற சமயம் , வீட்டினுள் நுழைந்த திருடர்கள் வீட்டில் இருந்த 20 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர். 

அதேவேளை வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கமரா உள்ளிட்ட அவற்றின் தொகுதிகளையும் பிடுங்கி சென்றுள்ளனர். 

திருடப்பட்ட நகைகளின் பெறுமதி சுமார் 20 இலட்ச ரூபாய் எனவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பலாலி பொலிஸார் தெரிவித்தனர். 

No comments