உக்ரைனுக்குக் கொத்துக்குண்டுகளை வழங்குகிறது அமெரிக்கா


உக்ரைனுக்கான புதிய $800 மில்லியன் இராணுவ தளபாட உதவிகளில் கொத்துக் குண்டுகளும் (கிளஸ்டர் குண்டுகள்) உள்ளடங்கியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த உதவி இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவதை எதிர்க்கும் கூட்டமைப்புகள் மற்றும் மனிதாபிமான அமைப்புகளிடமிருந்து விமர்சனங்களை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் பாட் ரைடரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அதுபற்றி தன்னிடம் எந்த தகவலும் இல்லை என்று கூறினார்.

வான்வழித்தாக்குதலில் கொத்துக்குண்டு வீசும்போது அது வானில் பிரதான குண்டிலிருந்து சிறிய சிறிய குண்டுகளாக பிரிந்து காற்றின் வேகத்தினால் பொிய நிலப்பரப்புகளை தாக்கி திதறடிக்கும் திறன் கொண்டது.

இக்குண்டுகள் விமானங்கள், பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகள் மூலம் எதிரி நோக்கித் தாக்க முடிவும்.

இக்குண்டுகள் நிலத்தில் வீழ்ந்து வெடித்து தாக்கத்தை ஏற்படுத்தினாலும் வெடிக்காத குண்டுகள் பல ஆண்கள் நிலத்தின் கீழ் புதையுண்டு பிற்காலத்தில் மனித குலத்திற்கு பொிய தேசத்தை ஏற்படுத்துகின்றது. எடுத்துக்காட்டாக அமெரிக்காவால் வீசப்பட்ட கொத்துக்குண்டுகள் இன்றும் வியற்நாமில் வெடித்துக்கொண்டே இருக்கின்றன.

கொத்துக்கொண்டுகள் வீசும்போது சராசரியாக 60 விழுக்காடு குண்டுகள் வெடிக்கின்றன. 40 விழுக்காடு குண்டுகள் நிலத்தில் வெடிக்காத நிலையில் காணப்படுவதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மதிப்பீடுகள் மேற்கோள் காட்டப்படுகின்றன.

இதனால் கொத்துக்குண்டுகள் அனைத்துலக போர் விதிகளின் படி போர்க்களத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன. இத்தடை விதிகளை மீறி ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியாவில் நடந்த போர்களிலும் பயங்கரவாத அமைப்புகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தவும் அமெரிக்காவினால் தன்னிச்சையாகப் பயன்படுத்தப்பட்டமை இங்கே நினைவூட்டத்தக்கது.

No comments