விம்பிள்டன் டெனிஸ் போட்டியில் போராட்டம் நடத்திய காலநிலை ஆர்வலர்கள்


விம்பிள்டன் டெனிஸ் சாம்பியன்சிப் போட்டியில் நேற்றுப் புதன்கிழமை காலநிலை ஆர்வலர்கள் இருவர் விளையாட்டுத் திடலில் தங்களது எதிர்ப்புக்களைத் தெரிவித்தனர். 

இரண்டு எதிர்ப்பாளர்கள் ஆட்டத்தை இடையூறு செய்ததால் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

21வது நிலை வீரரான பல்கேரிய கிரிகோர் டிமிட்ரோவுக்கும் ஜப்பான் வீரரான ஷோ ஷிமாபுகுரோ ஆகியோருக்கு இடையேயான முதல் சுற்று ஆண்கள் போட்டியின் போது, ​​இரண்டு ஆர்வலர்கள் விளையாட்டுத்திட் 18ஐ முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இருவரும் அணிந்திருந்த ரிசேட்டில் ''Just Stop Oil'' என்ற எதிர்ப்பு வாசகத்தை எதியிருந்தனர்.


No comments