வடகிழக்கு எங்கும் போராட்டம்!



முல்லைத்தீவு – அக்கரைவெளி  காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை ஒன்று கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் என பல்வேறு கோஷங்களை மாணவர்கள் எழுப்பினர். 

இதனிடையே வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாட்டில், தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் தீர்வு பயண செயற்பாட்டின் 100 நாள் செயற்பாட்டின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டும் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வினை நோக்கிய பயணத்திற்கு வலுச் சேர்க்கும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வுடகிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் இன்றைய தினம் திங்கட்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெற முடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை உறுதி செய்யுமாறு, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மக்கள் பிரகடன போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. 


No comments