லண்டன் விம்பிள்டன் பள்ளி விபத்து: 8வயது சிறுமி உயிரிழப்பு!! மருத்துவமனையில் 12 பேர்!

தென்மேற்கு லண்டன் உள்ள விம்பிள்டன் விம்பிள்டனில் உள்ள The Study Preparatory School என்ற பள்ளி மீது லேண்ட் ரோவர் மோதி விபத்துக்குள்ளானதில்

8 வயதுச் சிறுமி உயிரிழந்ததுடன் மேலும்  12 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

நேற்று வியாழக்கிழமை இச்சம்பவம் நடந்தது. காயமடைந்த குழந்தைகள் எவருக்கம் ஆபத்தான நிலையில் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய 40 வயதுடைய பெண் ஓட்டுநர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார்.

விசாரகயின் ஒரு பகுதியாக பள்ளியில் மோதிய லேண்ட் ரோவர் வாகனம் அகற்றப்பட்டது. பாதுகாப்பும் நீக்கப்பட்டது. இச்சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக கருதவில்லை என்று காவல்துறை கூறியது.

சம்பவ இடத்திற்கு 15 நோயாளர் காவு வண்டிகள் அனுப்பி 16 பேருக்கு முதலுதவிச் சிகிச்சை அளித்து அங்கிருந்து டூட்டிங்கில் உள்ள செயின்ட் ஜோர்ஜ் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சிகிற்சை வழங்கப்பட்டுள்ளது. 

இந்த சோகமான சம்பவத்தின் போது என்ன நடந்தது என்பதற்கான முழு சூழ்நிலையையும் புரிந்து கொள்ள நாங்கள் உழைக்கும்போது ஊகங்களை கூற வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக்கொள்கிறோம் காவல்துறை அதிகாரி ஒருவர் ஊடகங்களிடம் கூறினார்.

விம்பிள்டன் காமன் அருகே விபத்து நடந்த பெண்களுக்கான பள்ளிக்கு வெளியே மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

விம்பிள்டனுக்கான எம்பி ஸ்டீபன் ஹம்மண்ட், தோட்டத்தில் ஆண்டு இறுதி கொண்டாட்ட விருந்துக்கு மாணவர்கள் கூடியிருந்தனர் எனக் கூறப்பட்டுள்ளது.


No comments