டக்ளஸ் டெல்லி செல்கிறார்!ரணில் இந்தியா செல்லவுள்ள நிலையில் அப்பயணத்தில் தானும் இணைந்து கொள்ளவுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஏ-32 பல்லவராயன்கட்டு சந்தியிலிருந்து வேராவில் வரையான வீதியினை மக்கள் பாவனைக்கு உகந்த வகையில் புனரமைப்பு செய்வதற்கான ஆரம்ப நிகழ்வை ஆரம்பித்து வைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் பிரச்சினைகளையும் அவலங்களையும் தீராப் பிரச்சினைகளாக வைத்திருந்து, அதனூடாக சுயலாப அரசியல் செய்யும் தரப்புக்கள் விதைத்த நம்பிக்கையீனங்களை புறந்தள்ளி விட்டு, தன்மீது நம்பிக்கை வைத்து அணி திரண்ட மக்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்,  மக்கள் அவசியமானவை - சரியானவை என்று தான் நம்புகின்ற விடயங்களை நிறைவேற்றி மக்களின் நம்பிக்கை நிறைவேற்ற தான் தவறப் போவதில்லை எனவும் தெரிவித்தார். 

கிளிநொச்சி, பூநகரி, பல்லவராயன்கட்டு சந்தியிலிருந்து வேரவில் வரையிலான வீதியை மக்களின் பாவனைக்கு உகந்த வகையில் புனரமைப்புச் செய்வதற்கான பணிகளை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள நிலையில் வெறுமனே கிரவல் வீதியாக சீர் செய்வiதை பிரச்சாரப்படுத்துவதாக தமிழரசுக்கட்சி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.

யாழ்.மாவட்டத்தை தாண்டி தனக்கான வாக்கு வாக்கியொன்றை பெற்றுக்கொள்ள கிளிநொச்சி பக்கம் டக்ளஸ் மும்முரமாகியுள்ளார்.


No comments