தனித்திருந்த பெண் சடலமாக மீட்பு! மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்திற்கு முன்பாக கண்மின்னி என்று அழைக்கப்படும் (கீழே படத்தில் உள்ள பெண்) தனிமையில் இருந்த வயோதிபப் பெண் கொலை செய்யப்பட்டு இறந்துள்ளார். குறித்த கொலைச் சம்பவம் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) இடம்பெற்றிருக்கலாம் எனவும், அவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியும் கொட்டனால் அடித்தும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

நெற்றியில் ஒரு காயம் உள்ளது. ஆனால் அது அடிகாயமா என உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே உறுதிப்படுத்த முடியும் எனவும் இது கொலையாக இருக்கலாம் எனவும் சாவகச்சேரி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments