பணம் பறித்ததா சிஜடி?



கஞ்சா கடத்துவதாக தகவல் வந்துள்ளது. நாங்கள் சிஐடி உங்களை சோதிக்க வேண்டும் என கூறி பணம் அபகரிக்கப்பட்ட சம்பவம் வடமராட்சிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மந்திகை கொடிகாமம்  வீதியில் மக்கள் நடமாட்டம் குறைந்த வல்லிபுரக் குறிச்சி வீதியிலேயே இந்த  செயல் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தனின் தந்தையிடமே 18 ஆயிரம் பணம் அபகரிக்கப்பட்டுள்ளது.

நெல்லியடிப் பகுதியில் வசிக்கும் குறித்த நபர் குடத்தனை பகுதியிலுள்ள நிகழ்வொன்றிற்காக சிறிய ரக மோட்டார் சையிக்கிளில்  சென்று கொண்டிருந்த போது மக்கள் நடமாட்டமில்லாத பகுதியில் மோட்டார் சையிக்கிளில் வந்த இருவர் குறித்த நபரை வழிமறித்து தாங்கள் கஞ்சா கடத்துவதாக தகவல் வந்துள்ளது. நாங்கள் சிஐடி உங்களை சோதிக்க வேண்டும் என கூறி அவரின் பையை சோதித்த போது மற்றவர் அவரை சோதனையிட்டுள்ளார். அதன் பின்னர் அவரை அனுப்பி வைக்க, குடத்தனைக்கு சென்று பையை பார்த்த போதே பணம் களவாடப்பட்டமை தெரிய வந்துள்ளது. 

No comments