யூடோ பயிற்றுவிப்பாளர் கிளியில் தாக்கப்பட்டார்!கிளிநொச்சி மாவட்ட செயலக விளையாட்டு உத்தியோகத்தர் யூடோ பயிற்றுவிப்பாளர் பசுபதி ஆனந்தராஜா அவர்கள் கடமை முடிந்து வீடு சென்று கொண்டிருந்த போது மிக கடுமையான முறையில் தாக்கப்பட்டுள்ளார். 

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நாலாவது விடுதியில் சிகிச்சை பெற்றுபெறுகிறார். அண்மை நாட்களில் முகநூலில் அவர் எழுதிய அதிகார துஷ்பிரயோகங்கள் சம்பந்தமான விடயங்களின் பின்னணியில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருக்கிறது என்று அவருடைய குடும்பத்தவர்கள் தெரிவித்தார்கள்.

 மோசமான முறையில் இரத்தம் வெளியேறி மயக்கமடைந்துள்ள நிலையில் இவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

No comments