இன்றும் எண்மர் சென்றடைந்தனர்!



இலங்கையைச் சேர்ந்த எண்மர் இன்று சனிக்கிழமை தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

யாழ்பாணத்தைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண்கள், குழந்தைகள் என இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர்  புகலிடம் தேடி அகதிகளாக நேற்று இரவு சுமார் 8 மணியளவில் பைபர் படகில் புறப்பட்டு இன்றைய தினம் அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனையைச் சென்றடைந்தனர்.

இதனையடுத்தது பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு இலங்கையிலிருந்து வந்த அகதிகளின் எண்ணிக்கை 265 ஆக அதிகரித்துள்ளதாக குறிப்பிடத்தக்கது.

No comments