12 வருட நீடிப்பு!
இலங்கைக்கு உதவியாக இந்தியா வழங்கிய  கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இலங்கைக்கு 12 வருடங்கள் வரை அவகாசம் வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக, இந்தியாவின் ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கூட்டுத்தாபனம் (ECGC) லிமிடெட் தலைவர்/நிர்வாகப் பணிப்பாளர் எம்.செந்தில்நாதன் தெரிவித்துள்ளார் - 

கடந்த ஆண்டில் மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்ட போது இலங்கை, இருதரப்பு கடன் வழங்குநர்களுக்கு $7.1 பில்லியன் கடன்பட்டுள்ளது - $3 பில்லியன் சீனாவிற்கு, $2.4 பில்லியன் பாரிஸ் கிளப்பிற்கு மற்றும் $1.6 பில்லியன் இந்தியாவிற்கும் கடன்பட்டுள்ளது.

இந்தியா அண்மையில் இலங்கைக்கான 1 பில்லியன் டொலர் கடனை ஒரு வருடத்திற்கு நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments