53.03 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்து பொருட்கள் அன்பளிப்பு


இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங், சிறு குழந்தைகளுக்குத் தேவையான புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களை சுகாதார அமைச்சிடம் நேற்றைய தினம் புதன்கிழமை  கையளித்துள்ளார்.

53.03 மில்லியன் டொலர் பெறுமதியான இந்த மருந்துப் பொருட்கள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கையளிக்கப்பட்ட மருந்துகளில் குழந்தை பருவ தோல் நோய்கள், மூட்டுவலி மற்றும் புற்றுநோய்க்கான 16 வகையான மருந்துகள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments