ஐந்து நாட்கள் விடுமுறைக்கு பின் வங்கிகள் மீள திறக்கப்படுகிறது.


ஐந்து நாள் விடுமுறைக்குப் பின்னர் வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை திறக்கப்படவுள்ளன. 

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் முதல் வங்கிகள் மூடப்பட்டிருந்தன.

வங்கிகள் மூடப்பட்டதுடன் கொழும்பு பங்குச் சந்தையும் ஐந்து நாட்களுக்கு மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து வங்கிக் கிளைகளும் இன்றைய தினம் செவ்வாய்கிழமை முதல் வழக்கம்போல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments