தவறான ஊசி போடப்பட்டதால் யுவதி உயிரிழப்பு?


பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வயிற்றுவலிக்கு சிகிச்சை பெறச் சென்ற 21 வயதுடைய யுவதியொருவர்  உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 10 ஆம் திகதி கெட்டப்பிட்டி அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையிலேயே குறித்த யுவதி உயிரிழந்துள்ளார்.

தவறான ஊசி போடப்பட்டதால் குறித்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ள முறைப்பாட்டினையடுத்து, இது தொடர்பில் பேராதனை போதனா வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments