பெட்ரோல் விலை அதிகரித்தது


எரிபொருள் விலை இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, 92 ரக பெட்ரோல் லீட்டருக்கு 10 ரூபாய் அதிகரித்து 328 ரூபாயாகவும், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 20 ரூபாய் குறைந்து 365 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சூப்பர் டீசல் 6 ரூபாய் அதிகரித்து 346 ரூபாயாகவும், ஓட்டோ டீசல் 2 ரூபாய் குறைந்து 308 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும் மண்ணெண்ணெய் 9 ரூபாயினால் குறைக்கப்பட்டு 236 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

No comments