நாட்டை வந்தடைந்தார் ரணில்


இந்தியாவுக்கான தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை இரவு நாட்டை வந்தடைந்தார்.

ஜனாதிபதி மற்றும் அவரோடு சென்ற குழுவினர் நேற்று இரவு 11.30 மணியளவில் நாட்டை வந்தடைந்ததாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி நேற்று முன்தினம் இந்தியாவுக்குப் புறப்பட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது விஜயத்தின் போது இந்தியப் பிரதமர், ஜனாதிபதி மற்றும் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்து இரு நாடுகளுக்கும் முக்கியமான விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.

இதேநேரம் இந்தியாவில் அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானியையும் சந்தித்தும் நேற்று மாலை இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவாத்ராவையும் சந்தித்தும் கலந்துரையாடியிருந்தார்.

No comments