வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் தொடர்பில் தீர்மானம்!
மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலும், வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செய்தியில் அந்த சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

முன்னதாக மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை.

எனவே மின்சார கட்டணங்கள் குறைக்கப்பட்டதனால், வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

No comments